பிக் பாஸ் 7ல் பங்கேற்கும் பிரபலங்கள் யார் தெரியுமா? நியூ அப்டேட்!

BIG BOSS 7 TAMIL
BIG BOSS 7 TAMIL

தமிழில் வெளிவரும் முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்த புதிய செய்திகள் பங்கேற்கும், பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 100 நாட்கள் ஒரு வீட்டில் அடைக்கப்படும் போட்டியாளர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள், சண்டைகள், போட்டிகள் ஆகியவையே இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகவும்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெரும்பான்மையானவர்கள் அறியப்பட்ட பிரபலங்களாக இருப்பர்கள். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இது மட்டும் அல்லாது நிகழ்ச்சியை தமிழ் திரையுலகின் உச்சபட்ச நட்சத்திரமான நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது 7வது சீசனை எட்டி உள்ளது.

இது தொடர்பான புதிய பிரமோ வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் கமலஹாசன் இருப்பது போன்ற காட்சியும், மேலும் புதிய லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 7வது சீசன் பற்றிய புதிய தகவல்கள் தற்போது அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருக்கின்றன. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

இந்த சீசனில் எப்போதும் இல்லாத வகையில் 2 வீடுகள் தயாராகி வருகிறதாம். 2 வீடுகளும் புதிய வடிவில் பல்வேறு வசதிகளை கொண்டதாக நவீன முறையில் உருவாக்கப்பட்டு வருகிறதாம்.

இது மட்டுமல்லாது தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகை ஒருவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்தம் தயாராகி வருகிறதாம். மேலும் தமிழ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சமீபத்தில் பிரபலம் அடைந்த பெண் பாஸ் ஓட்டுநர் ஷர்மிளா, நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நடிகை ரேகா நாயர் மற்றும் சின்னத்திரை பிரபலம் ஜாக்லின், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரினா, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com