டைட்டில் வின்னர் இடத்தில் பிரதீப்.. சண்டைக்கு போன ஹவுஸ் மேட்ஸ்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் 7!

பிரதீப்
பிரதீப்

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எப்போதும் இல்லாததாக இந்த சீசனில் தான் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் என 2 வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படும் 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இவர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து கொடுக்க வேண்டும். முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆன நிலையில், 2வது வாரம் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாததால் தானாகவே வெளியேறினார். தொடர்ந்து 3வது வாரம் விஜய் எலிமினேட் செய்யப்பட்டார். 

தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்கான புரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதில், ரேங்கின் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 15 இடங்கள் என வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இடம் டைட்டில் வின்னரையும், 15வது இடம் வெளியேற வாய்ப்பிருப்பதையும் குறிக்கும். அப்போது டைட்டில் வின்னர் இடத்தை பிரதீப் பிடித்து கொள்ள ஹவுஸ் மேட்ஸ் சண்டைக்கு நிற்கின்றனர். அதற்கு பதிலளித்த பிரதீப் நானும் ஏழை தான் எனக்கு இந்த பணம் முக்கியம் என்னை கொன்று போட்டு வேண்டுமானால் இந்த இடத்தை பிடித்து கொள்ளுங்கள் என கூறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com