பிக்பாஸ் 7 எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. வெளியானது புரோமோ!

பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7
Published on

பிக்பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து வரவிருக்கும் 7வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு, அதன் புரொமோக்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்நிலையில், இந்த முறை 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ரமோவில் கமல் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். வழக்கமாக சண்டை போட்டு, பிக்பாஸ் வீடு இரண்டாகும். இந்த முறை வீடே இரண்டாகியிருப்பதால் சண்டையும் வேறுவிதமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.

மேலும், பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் பதில் தரும் வகையில் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரமாண்ட தொடக்கவிழாவுடன் ஆரம்பிக்கவுள்ளதாக புரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஊடு ரெண்டாயிடுச்சு இப்போ எல்லமே ரெண்டு எண்டர்டெயின்மண்டும் ரெண்டு. ரெண்டுல ஒன்று பார்த்துலாம். ரெண்டையுமே பார்த்திடலாம் என்று கமல் பேசுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com