பிக்பாஸ் நாமினேஷன் ! இந்த வாரம் வெளியேறப் போவது இவரா?

Nivashini
Nivashini

கடந்த நிகழ்ச்சியில் இருந்து நேற்று மஹேஸ்வரி வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து இந்த வாரத்திற்க்கான நாமினேஷன் ப்ராசஸ் இன்று துவங்கியுள்ளது.

இதில் ராபர்ட் மாஸ்டர், அசீம், நிவாஷினி, தனலட்சுமி, ஜனனி உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்து போட்டியாளர்களில் இருந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டுவெளியேறப்போவது யார் என்பது குறித்து தற்போதே கேள்வி எழுந்துவிட்டது. இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளறியுள்ளது.

இந்த வாரம் வெளியேறப்போவது தனலஷ்மியா? கதிரா? நிவாஷினியா?

மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று நிவாஷினி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த வாரம் தனலஷ்மி ஸ்வீட் கேமில் கோக்குமாக்காக விளையாடியதாக கமல்ஹாசன் வறுத்து எடுத்திருந்தார். நிகழ்ச்சியின் உச்சமாக தனலஷ்மிக்கு குறும்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதை கண்டு பாத்ரூமில் கதறி அழுதார் தனலஷ்மி. தனலஷ்மியும் இரண்டு நாட்களுக்கொரு முறை அம்பியாக மாறி என்னை வெளியே அனுப்பிடுங்க பிஸ் பாஸ் என கதறி கதறி அழுது வருகிறார்.

Dhanalakshmi
Dhanalakshmi

மறுநிமிடம் அந்நியனாகி "சாரி பிக்பாஸ்" நான் கஷ்டப்பட்டு உள்ள வந்திருக்கேன் என்னை வெளியே அனுப்பிடாதிங்க என காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதுமாக அவ்வப்போது மாறி மாறி பேசி பார்வையாளர்களை குழப்பி வருகிறார் . அதனால் தனலஷ்மி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

kathiravan
kathiravan

அடுத்ததாக கதிர் அவர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கிறாரா?இல்லையா? என்றே தெரிவதில்லை. கதிர் அளவுக்கு மீறி அட்வைஸ் , மொக்கை போடுகிறார் என ஹவுஸ்மேட்களால் குற்றம் சாட்டப்பட்டார். அதனால் கதிரவன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வார இறுதியில் ட்விஸ்ட் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com