பிக்பாஸ் முதல் எலிமினேஷன் இவங்களா?... ரசிகர்கள் ஷாக்!

BIGG BOSS 7 TAMIL
BIGG BOSS 7 TAMIL

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள்  பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த வார கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் வர்மாவை அதிகம் ஈர்க்காதவர்கள் என்று, ஐஷு, நிக்ஸன், எழுத்தாளர் பவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகிய ஆறு பேரும் இரண்டாவது வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.

இரண்டாவது வீட்டிற்கு ஸ்மால் பாஸ் வீடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேர் இந்த வீட்டிற்கு செல்வார்கள் என்றும், அந்த ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், எந்த டாஸ்கிலும் பங்குபெற கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ரூல்ஸை மீறியதால் விசித்ராவும், யுகேந்திரனும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்த வாரம் பல சண்டைகள், பல சச்சரவுகள், சந்தோஷங்கள் என கடந்த நிலையில் இறுதியாக நேற்று அனைவரும் எலிமினேஷன் கட்டத்தை எட்டினர். யார் முதல் வார எவிக்க்ஷன் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அனன்யா பிக்பாஸ் 7 சீசனில் முதலாவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார். 

ஏனென்றால், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல நாமினேட் ஆன காரணத்தால் அனன்யாவால் எந்த போட்டியிலும் பங்கு பெற முடியவில்லை. மேலும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்ததால் அவரை பற்றி முழுதாக வெளிப்படுத்திக்கொள்வதற்கு முன்பே முதல் வாரமே எலிமினேட் ஆகிவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com