ஹவுஸ்மேட்ஸை மிரட்டிய பிக்பாஸ்! திரு திரு வென முழித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் திரைப்படங்கள், சின்ன திரைகளில் ஸ்டாராக ஜொலித்துவருகிறார்கள்.

தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனில் வெற்றி நடை போட்டு வருகிறது. சீசன் 6 தொடங்கி சுமார் 85 நாட்களைகடந்து விட்டது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீசன் 6ல் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட எட்டு போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார்இல் பார்க்கும் விதமாக லைவ்வாக ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.

இந்த பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய முதல் நாளில் இருந்து சண்டை இருந்து வருகிறது. இந்த சீசனின் விறுவிறுப்புக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா எனமொத்தம் 13 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜனனி வெளியேறிய போது குறைவான வாக்குகள் வாங்கிய போட்டியாளர்களை விட்டு விட்டு ஜனனியை வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிக்பாஸ்
பிக்பாஸ்

அதேபோல் கடந்த வாரம் தனலட்சுமி வெளியேறிய போது மைனா, கதிரவன், ரட்சிதா போன்ற குறைந்த பங்கெடுப்பு உள்ள போட்டியாளர்களை விட்டு விட்டு டிஆர்பிக்காக விளையாடி வந்த தனலட்சுமியை வெளியேற்றி இருக்கிறார்கள் என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் தனலட்சுமி ரசிகர்கள்.

அதே போல இந்த வாரம் மணிகண்டனை வெளியேற்றி இருந்தார்கள். இத்தனை வாரங்களாக மணிகண்டனை சேவ் செய்து உள்ளே வைத்ததே அவரது சகோதரி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வருவார் என்பதற்காகத்தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த வாரம் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக் பாஸ் ஒரு புதுமையான முறையில் நாமினேஷன் அறிவித்திருந்தார்.

போட்டியாளர்களை உள்ளே அழைத்து இந்த பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்? என கடுமையாக கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு திறமையாக பதிலளித்த அசீம் தவிர மற்ற போட்டியாளர்களை நாமினேஷன் லிஸ்டில் அறிவித்திருந்தார் பிக்பாஸ்.

ஹவுஸ்மேட்ஸ் அனைவரை மீதும் பிக்பாஸ் முகத்தில் அடித்தாற் போல் கேள்விகளை வீசினார் . பிக்பாஸின் இந்த மாறுதலைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் திரு திரு வென முழித்துக் கொண்டிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com