பிக்பாஸ் அட்ராசிட்டிஸ் வெளியேறிய தனலஷ்மி : குமுறிய ஆதரவாளர்கள்!

Dhanlakshmi -Aseem
Dhanlakshmi -Aseem

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி நேற்று அதிரடியாக வெளியேறினார். அவருக்கு மக்கள் ஆதரவு இருந்த போதும் ஏன் வெளியேறினார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும்நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 72 நாட்களைக் கடந்துள்ளது. இருப்பினும் போட்டியாளர்கள் கண்டண்ட்களை வாரி வழங்குவதால் நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதையடுத்து நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தனலட்சுமி வலுவான போட்டியாளர், டாப் லிட்டில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தனலட்சுமியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Big boss
Big boss

மக்களின் ஆதரவு அதிகம் இருந்த தனலட்சுமி அதிரடியாக வெளியேற்றியதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அதாவது இதுவரை தனலட்சுமி கொடுக்க வேண்டிய கன்டென்ட் எல்லாமே கொடுத்து விட்டார். 76 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமிக்கு வெளியே நல்ல வரவேற்பு இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி பத்து வாரங்கள் முடிந்த நிலையில் 11வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 10 போட்டியாளர்கள் இருந்த வீட்டில்தனலட்சுமி வெளியேறியதை அடுத்து தற்போது ஒன்பது போட்டியாளர்கள் தான் வீட்டில் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றை எபிசோடில் வெள்ளை நிற சூட்கோட்டில் வந்திருந்தார் கமல். போன வாரம் குழந்தைகள் டாஸ்க் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என்று கூறி,அமுதவாணன், விக்ரமன்,அசீம் ஆகியோரை குழந்தைப்போல பேச வைத்து அழகு பார்த்தார். இதிலும், அசீமை நைசாக கிண்டலடித்தார்.

மேலும், விக்ரமன் அம்பேத்கர் பற்றி கடிதம் எழுதி இருந்தார். இது குறித்து பேசிய கமல், இதுபோல நானும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி எழுதினேன் என்று கூறி போட்டியாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். இந்த கடிதத்தின் பாதிப்பில் தான் ஹேராம் படத்தை எடுக்க ஊக்கப்படுத்தியதாக கூறி, தனது நினைவலைகளை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். இறுதியாக தனலட்சுமி வெளியேறியதும் அன்றைய நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com