திவ்யா -அர்னவ்
திவ்யா -அர்னவ்

சர்ச்சையில் முற்றும் திவ்யா அர்னவ் விவகாரம்!

கேளடி கண்மணி’, ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்தானவர். இவருக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். கேளடி கண்மணி’யில் உடன் நடித்த அர்னவுடன் இவர் நெருங்கிப் பழகி வந்தார்.

இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவருக்கும் இவரது இரண்டாவது கணவர் அர்னவ்வுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சமூகவலைத்தளங்களுக்கு தீனி போட்டு வருகிறது.

தினம் ஓரு பிரச்சனையாக இருவரும் சமூக வலைதலங்களில் கருத்து மோதல்களில் ஈடுபடுவதும், வீடியோக்களை வெளியிடுவதுமாக பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது இந்த விவகாரம்.

அர்னவ்-திவ்யா
அர்னவ்-திவ்யா

இதில் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விடுவதும், மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுவதும் வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தது போல் உள்ளது. தற்போதைய யூட்யூபர்களுக்கு இதுவே ஹாட் டாபிக்.

திவ்யா சில தினங்களுக்கு முன் தான் மீண்டும் கர்ப்பமடைந்திருப்பதை சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார். அர்னவுக்கும், திவ்யாவுக்கும் திருமணம் நடந்த விஷயமே அப்போதுதான் பலருக்குமே வெளியில் தெரிந்தது. அதற்குள் தற்போது பிரச்சனைகள் முற்றிவருகிறது.

தற்போது அர்னவ் - திவ்யா இடையே பிரச்னை அதிகமாகி திவ்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நிலை வரையில் வந்து நிற்கிறது.

சின்னத்திரை நடிக, நடிகையருக்குள் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இது முதல்முறையல்ல. அடிக்கடி இதுபோல் நிகழ்வது வருத்தம் தருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் கவலை தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com