பிக் பாஸ் விளையாட்டில் விக்ரமன் ஏன் தோற்றார் தெரியுமாங்க?

பிக் பாஸ் விளையாட்டில் விக்ரமன் ஏன் தோற்றார் தெரியுமாங்க?

பிக் பாஸ் விளையாட்டு சீசன் 6 நிகழ்ச்சி கடந்த நூறு நாட்களையும் தாண்டி நடைபெற்று வந்த நிலையில், நேற்று க்ராண்ட் ஃபினாலே நடைபெற்றது. இதில் அசீம், ஷிவின், விக்ரமன் ஆகிய மூவர் தேர்வாகி இருந்தனர். இந்த மூவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நாளான நேற்று எதிர்பார்த்தபடியே ஷிவின் அந்தப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சம வாக்கு பலத்தோடு இருந்த அசீம், விக்ரமன் ஆகிய இருவரில் யார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறப்போகிறார்கள் என்ற அனைவரும் காத்திருந்த வேளையில், இறுதி முடிவாக அசீம்தான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அசீமுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், மாருதி சுசுகி சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அசீம் அந்த விருதைப் பெற்றவுடன் வழக்கம்போல் தமக்கே உரிய கெத்தான பாணியில், ‘இந்த வெற்றி இறைவனுக்கு. எனக்கு சிறு வயதிலிருந்தே நல்லதை மட்டுமே சொல்லி வளர்ந்த எனது பெற்றோருக்கு’ என்று கூறினார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சென்ற முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை எலிமினேஷனுக்காக நாமினேஷன் செய்யப்பட்டவர் அசீம். அதோடு பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்தவர் என்றால் அது அசீம் மட்டுமே. அவர் சண்டை போடாத நபரே அந்த வீட்டில் இல்லை என்று கூறுமளவுக்கு அனைவரிடம் வெறுப்பை சம்பாதித்திருந்தார். ஆனாலும், அனைத்து வாரங்களிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று எலிமினேஷனிலிருந்து தப்பித்தார். இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியும் பெற்றார்.

துசரி, அனைவராலும் இவர்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் ஏன் தோற்றார் தெரியுமாங்க? இது நம்மோட தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ஏராளமான பிக் பாஸ் ரசிகர்களின் கருத்தும்கூட. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விக்ரமன் நியாயம், நீதி என்று சொல்லிக்கொண்டு சக ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்காகவும் பரிந்துபேசுவதாக நினைத்து அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்தது ஒரு காரணம்.

அடுத்து, குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றைப் பின்புலமாகக் கொண்ட விக்ரமனுக்கு, அந்தக் கட்சியின் தலைவர், ‘அனைவரும் விக்ரமனுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்ற அறிக்கை விட்டது, அவருக்கு ஒரு பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விட்டது. அதேசமயம் அதுவே அசீமுக்கு சாதகமாகவும் அமைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அதோடு, பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்களுக்கு ஆதரவாக, குறிப்பாக ஷிவின் நரம்பு புடைக்கப் பேசுவது அனைத்தும் நியாயம்தான் என்று கண்மூடித் தனமாகக் கூறியதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசீமுக்கு ஆதரவு என்று இல்லாவிட்டாலும், விக்ரமனுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் அசீமை வெற்றி பெற வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அனைத்து வாரமும் நாமினேட் செய்யப்பட்ட அசீம், ‘நான்தான் வெற்றி பெறுவேன்’ என்று அடித்துச் சொல்லி வெற்றிக் கோப்பை விக்ரமனிடம் இருந்து தட்டிப் பறித்தார். இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் அசீமை திட்டித் தீர்த்த சக ஹவுஸ்மேட்ஸ் அனைவர் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருக்கும் அவரது ரசிகர்களிடம் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com