பிக் பாஸ் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன்: நடிகர் மாரிமுத்து பேச்சு!
பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் நாடாகம் மூலம் பிரபலமான நடிகர் மாரிமுத்து தற்போது அதிகம் பேசப்படக்கூடிய முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், பிக் பாஸ் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குனராக திரை உலகத்திற்கு அறிமுகமானவர் மாரிமுத்து. பிறகு இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தராததால் யுத்தம் செய் திரைப்படத்தின் மூலமாக குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்தில், முக்கிய தோற்றத்தில் நடிக்க நடிகர் மாரிமுத்து வாய்ப்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியான ஜெயிலர் படம் வரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருக்கிறார்.
அதே நேரம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் அவருடைய எதார்த்தமான பேச்சும், எளிமையான நடிப்பும் அவரை பேசுபொருளாக மாற்றி இருக்கிறது. எதிர்நீச்சல் தொடரில் அவர் பேசும் டயலாக்குகள் மீம்ஸ்களாகவும் ஸ்டேட்டஸ் ஆகும் அதிகம் பகிரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது, பிக் பாஸ் என்பது மிகப்பெரிய பிளாட்பார்ம். உலகம் முழுவதும் பிரபலம் அடைய பிக் பாஸ் உதவும் என்பது உண்மையை. ஆனால் நான் தற்போது நீண்ட ப்ராஜெக்ட்டில் இருக்கின்றேன். இந்த ப்ராஜெக்ட் எனக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. தற்போது நடித்து வரும் சீரியலை விட்டு நகர்வது என்பது முடியாத காரியம். அப்படியே ஒரு வேலை பிக் பாஸ் வீட்டுக்கு சென்றாலும் இதுவரை இருந்த சீசன்களை விட இந்த சீசன் மிகப்பெரிய வெற்றியை பெரும், முதல் இடத்தை பிடிக்கும். அப்படியே பிக் பாஸ் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன் என்று தெரிவித்தார்.