பிக் பாஸ்
பிக் பாஸ்

மீண்டும் பிக் பாஸ் வருகிறாரா? ஜி பி.முத்து?

டிக் டாக் மற்றும் யூட்யூப் மூலமாக சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் ஜி பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஜிபி முத்துவிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூடும் என்று பிக் பாஸ் இவரை களம் இறக்கியிருந்தது.

ஜி பி.முத்து
ஜி பி.முத்து

ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாகவே விளையாடி வந்தார். பிக் பாஸ் நினைத்தபடியே ஜிபி.முத்துவின் ரசிகர்கள் தொடர்ந்து இவரை ரசிப்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள்.

இரண்டாவது வாரத்தில் ஜிபி.முத்து தான் வீட்டை விட்டு வெளியேறி தன் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். கமலஹாசன் எவ்வளவோ எடுத்து கூறியும் ஜிபி முத்து வெளியேறுவதில் உறுதியாக இருந்தார். அதன்படி கடந்தவாரம் சனிக்கிழமை ஜி பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஜி பி.முத்து
ஜி பி.முத்து

தற்போது மறுபடியும் ஜி பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வீட்டுக்குள் வருவார் என விவாதங்கள் இணையதளங்களில் தூள் பறந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஜி பி.முத்து பிக்பாஸ் வீட்டிற்கு மறுபடியும் வரப்போவதாக வதந்திகளும் பரவி வருகிறது.

ஜி பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவாரா?மாட்டாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com