கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? பிக் பாஸ் ரசிகர்கள் ஆவல்!

விஜய் டிவியில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. அதனை வாரம் தோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். அதில் வாரந்தோறும் நடைபெறும் பிரச்சனைகள் வார இறுதியில் கமல் அவர்களை விசாரிக்கப்பட்டு பஞ்சாயத்து செய்யப்படுகிறது. அதில் ஹவுஸ் மேட்டுக்கள் சண்டை சச்சரவுகள் வசவுகள் விவாதங்கள் என தூள் கிளப்பி வருகிறார்கள். பிக் பாஸ் வேறு அவ்வவ்போது டாஸ்க் என்கிற பெயரில் சர்ச்சையை கிளப்பிவிடுகிறார்.

இந்த வாரம் திங்களன்று பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், வழக்கம்போலவே அசீம் நாமினேட் செய்யப்பட்டார். அசீமை தொடர்ந்து கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டபோட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் கதிரவன் முதலில் சேவ் ஆனார். கடைசி நிலைக்கு அசீம்தள்ளப்பட்டார். ஆனால், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எல்லாம் அசீம் தான் அதிக ஓட்டுக்களை பெற்று இருந்தார். இந்நிலையில், இந்த வாரம் கதிரவன்முதலில் சேவ் ஆவாரா? அல்லது இந்த வாரமும் அதிக ஓட்டுக்களுடன் அசீம் சேவ் ஆவாரா?

Big boss
Big boss

மணிகண்டன் கடைசியில் இருந்த நிலையில், திடீரென அவர் அதிகவாக்குகளுடன் மேலே வரக் காரணமே அவரது சகோதரி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்றும்நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஜனனியை அம்பாக பயன்படுத்தி விளையாடி வரும் வில் அமுதவாணன், ரச்சிதா நோ சொல்லியும் தொடர்ந்து ஜொள்ளு விட்டு வரும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் கேஸில் ஜெயித்தது இவங்க தான். ஆனால், நான் வெற்றியாளர் இவங்கன்னு சொல்றேன் என காமெடி செய்த ராம் உள்ளிட்டோர் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

ராம் இந்த வாரம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு தூங்கி ரெஸ்ட் எடுத்து வருகிறார் என ஆயிஷா உள்ளிட்டோர்களே கலாய்த்து வரும் நிலையில் , ராம் தான் வெளியேறுவார் என எதிர்பார்த்து வந்தனர் பலர் ஆனால் கடைசி நேரத்தில் திடீரென கடைசி இடத்துக்கு கொஞ்சம் மேலே போய் விட்டாரே என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.

ரச்சிதாவுடன் காதல் செய்கிறேன் என்கிற பெயரில் கடந்த வார இறுதியில் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றிய ராபர்ட் மாஸ்டருக்கு இந்த வாரம் குட் பைசொல்ல பிக் பாஸ் ரசிகர்கள் ரெடியாகி விட்டனர். கருத்துக் கணிப்புவாக்கெடுப்பில் கடைசி இடத்தில் இப்போதைக்கு ராபர்ட் மாஸ்டர் தான் உள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக யார் வெளியேறுவார் என்பது நாளை மாலை லீக் ஆகலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் .ஆவலுடன் காத்து கிடக்கிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com