#Breaking யார் மீது தவறு? யார் சரி? குறும்படம் போடுவாரா கமல்ஹாசன் ?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக் பாஸ் சீசன் 6ல் இன்று வெளியான ப்ரமோ பயங்கரமான சூட்டை கிளப்பி வருகிறது. ஸ்வீட் ஸ்டால் டாஸ்கில் தான் இந்த சண்டை சச்சரவுகள் நடைபெற்று வருகிறது . இந்த விளையாட்டில் ஸ்வீட் ஸ்டால் டாஸ்கில் ஹவுஸ் மேட்கள் கண்ணா லட்டு தின்ன ஆசையா , அடை- தேனடை என்று இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

நேற்றைய விளையாட்டில் அஸீம், மஹாலக்ஷ்மி மற்றும் விக்ரமன் மூவரும் காரசாரமாக விவாதித்து கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் விளையாடி வந்தனர். இறுதியாக இரு அணியினரும் அசீம், மணிகண்டன் , மைனா, ஜனனி போன்று சில போட்டியாளர்களை மாற்றிக்கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 6 இன்று வெளியான இரண்டு ப்ரமோக்களிலுமே சண்டை சச்சரவுக்கு சற்றுமே பஞ்சமில்லை. அதில் மணிகண்டனுக்கும், தனலக்ஷ்மிக்கும் பயங்கரமான சண்டை நடைபெறுவதாக காட்டியுள்ளனர். பிக் பாஸ் வீடே அதிரும்படியாக கூச்சலும், குழப்பமும் காட்டு காத்தலுமாக ரணகளமாகி வருகிறது.

அதில் பஸ்ஸர் அடித்துமே மணிகண்டன் , தனலக்ஷ்மி இருவரும் , ஹவுஸ் மேட்கள் சிலரும் என அந்த கன்வேயர் பெல்ட்டுக்குள் கையை விட்டு பிடுங்குகின்றனர் . அதில் தனலக்ஷ்மி கையிலிருந்த அட்டையை மணிகண்டன் பிடுங்குவதாக தெரிகிறது. அந்த தள்ளுமுள்ளுவில் தனலக்ஷ்மி கீழே விழுகிறார்.

கீழே விழுந்த தனலக்ஷ்மி, மணிகண்டனை வாடா போடா என கண்டபடித் திட்டுவதாக தெரிகிறது. உன் வயசு என்ன என் வயசு என்ன மரியாதையில்லாம பேசுவியோ? என பயங்கரமாக கோபம் கொண்ட மணிகண்டன் தனலக்ஷ்மி கடையிலிருந்த பொருட்களை எடுத்து கொள்கிறார். இதனால் கடும் கோபமடைந்த தனலக்ஷ்மி வீடே அதிரும்படி ஓவென கத்துகிறார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இந்த சண்டையில் யார் மீது தவறு? யார் சரி? என வார இறுதியில் கமலஹாசன் பஞ்சாயத்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் குறும்படம் போடுவாரா கமல்ஹாசன் ? என நெட்டிசன்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்த சீசனில் அஸீம், தனலக்ஷ்மி, மஹாலக்ஷ்மி மற்றும் விக்ரமன் என கண்டண்ட்களை அள்ளி , அள்ளி வீசும் போட்டியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். இதனால் விஜய் டிவி பார்வையாளர்களுக்கு சரியான என்டெர்டெயின்மென்ட் .கிடைத்துவருகிறது.என்பதே நிஜம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com