பிக்பாஸின் கடைசி எவிக்‌ஷன்! கமல் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்!

பிக்பாஸின் கடைசி எவிக்‌ஷன்! கமல் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்!

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படி தான்போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, இந்த வாரத்துடன்முடிவுக்கு வருகிறது. இதுவரை 14 பேர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த சீசனின் கடைசி எவிக்சன் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே அமுதவாணன் டிக்கெட் டூ பினாலே வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டார். அவரை தொடர்ந்து அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் ஓட்டுகளின் அடிப்படையில் காப்பாற்றப் பட்டு விட்டனர். இறுதியாக மைனா, கதிர், ஏடிகே ஆகியோர் இடையே யார் வெளியேறும் போட்டியாளர் என கடும் போட்டி நிலவியது.

அதனையடுத்து கார்டன் ஏரியாவில் மூவருக்கும் உறியடி பானைகளை கட்டி தொங்க விட, அவைகளை மூன்று பேரும் ஒரே நேரத்தில் உடைத்தனர். அப்போது அதிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் விழுந்த ஏடிகே எவிக்சன் செய்யப் பட்டார். 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததே மிகப் பெரிய வெற்றி தான் என கூறியபடி மகிழ்ச்சியோடு வெளியேறினார் ஏடிகே. ஆனால், வெளியே அவரே எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைசினை கொடுத்தார் கமல்.

சாக்ரிபைஸ் டாஸ்கில் முன்பகுதியில் உள்ள முடியை தவிர மற்ற மற்ற இடங்களில் மொட்டை தலையுடன் வெளியேறினார் ஏடிகே. அப்போது அவரிடம் பேசிய கமல், உங்களை இப்படியே வெளியே செல்ல விட மாட்டேன், எனக்காக தயார் செய்யப்பட்ட ஒன்றை உங்களுக்கு தருகிறேன் எனக் கூறி, KH என பொறிக்கப்பட்ட ஒரு தொப்பியினை ஏடிகேவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஏடிகே, ரொம்பவே எமோஷனலாகி விட்டார். அதனை அகம் டிவி வழியே பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது கமலின் வேண்டுகோளை ஏற்று ஒரு ராப் பாடலையும் அவர் பாடிச் சென்றார். ஏடிகே. இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com