
தற்போதெல்லாம் சினிமா தியேட்டர்களில் படங்கள் வெளியாவதை போலவே ஓடிடியில் படங்கள் வெளியாவதற்கும் அதீத வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மார்ச் முதல் வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. மார்ச் முதல் வாரம் ஓடிடி தளங்களில் 2 தமிழ் படங்கள் உள்பட 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஒரு வெப் தொடரும் வெளியாக உள்ளது.
தலைக் கூத்தல்:
நடிகர் சமுத்திரக்கனி ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தலைக் கூத்தல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தபடத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ்ஓடிடி தளத்தில் 3ந் தேதி வெளியாக உள்ளது.
அலோன்:
மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘அலோன்’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரித்விராஜ், மஞ்சுவாரியர், சித்திக், மல்லிகா சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
புட்ட பொம்மா:
இதேபோல் அத்ரிஷ்யம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தெலுங்கில் 'புட்ட பொம்மா' படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்தியில் குல்முகார் என்கிற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வருகிற மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
தி கிரேட் இந்தியன் கிச்சன்:
இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் அதே பெயரில் தமிழில் பிப்ரவரி 3 ந் தேதிவெளியானது. இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகி சின்மயியின் கணவரும்நடிகருமான ராகுல் ரவீந்தர், மாமனாராக நந்தகுமார் மற்றும் யோகி பாபு ஆகியோர்நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில்ஜி5 ஓடிடி தளத்தில் மார்ச் 3ந் தேதி இப்படத்தை பார்க்கலாம்.
குல்மோஹர்:
பேமிலி மேன் வெப் தொடர் மூலம் நம் மனங்களை வென்ற மஜோன் பாஜ்பாய்நடித்திருக்கும் தொடர்தான்'குல்மோஹர்' புதிய நகரத்தில் ஒரு புதிய வீட்டிற்குகுடியேறும் ஒரு குடும்பத்தின் சிக்கலான உறவுகளை மையமாகக் கொண்ட ஒருகதையாகும். இதில் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர், சூரஜ் சர்மா, காவேரிசேத், அமோல் பலேகர், சிம்ரன் மற்றும் உத்சவி ஜா ஆகியோர் நடித்துள்ளனர். இதுடிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.