அடுத்த ஆதி குணசேகரன் இவரா? நடிகர் வேல ராமமூர்த்தியே சொன்ன நச் பதில்!

வேல ராமமூர்த்தி - மாரிமுத்து
வேல ராமமூர்த்தி - மாரிமுத்துவிஜி

திர்நீச்சல் சீரியலின் அடுத்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் டப்பிங் பணியின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்காகவே எதிர்நீச்சல் சீரியல் பார்த்தவர்கள் பலர். அப்படி யாரும் நிரப்ப முடியாத அளவிற்கு நடிகர் மாரிமுத்து நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார்.

இவரின் நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர்கள் பல படங்களில் வாய்ப்பளித்தனர். ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் அவர் அடைந்த உயரம் உச்சக்கட்டமாகும். தற்போது அவர் உயிரிழந்துள்ளதால் அவரின் கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப்போவது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் பலர் நடிகர் வேல ராமமூர்த்தி தான் கரெக்டாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து பேசிய நடிகர் வேல ராமமூர்த்தி, வாய்ப்பு இருந்தால் எதிர்நீச்சல் டி.வி.தொடரில் மட்டும் நடிப்பேன் என கூறியுள்ளார். தொடர்ச்சியாக பலரும் என்னிடம் இந்த கேரக்டரில் நடிப்பாயா என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com