பிக்பாஸில் போட்டியாளருக்கு நேரிடையாக செக் வைக்கும் ‘ ஓபன் நாமினேஷன்’

Big boss
Big boss

விஐய் டிவியில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6 நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் தொடங்கி பல நாட்களை கடந்து விட்ட இந்த சீசனானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சண்டைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே நித்தமும் இடம் பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும், சண்டைகளும் தான்.

பிக்பாஸில் தொடர்ந்து சண்டையும் சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் ஜிபிமுத்து, சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி , நிவாஷினி ஆகியோர்கள் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார்கள்.

Ayisha
Ayisha

கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் தான் ரக்ஷிதாவிடம் தொடர்ந்து நெருங்கி பழகி வருகிறார். இது பார்வையாகலர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி வந்தது எனவே அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள் . ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றதால் எதிர்பாராதவிதமாக நிவாஷினி வெளியேறினார்.

இதில் பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெறுவது சலசலப்பை ஏற்படுத்திவருகிறது . அதன்படி லிவிங் ஏரியாவில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் பிளாஸ்மா டிவி முன்பு நின்று தலா 2 போட்டியாளர்களை காரணத்துடன் நாமினேட் செய்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், நாமினேஷன் ப்ராசஸிற்கு பிறகு பிக்பாஸ் வீடு ரணகளமாகும் என கூறி வருகின்றனர். சாதாரணமாகவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஓபன் நாமினேஷன் பிறகு பயங்கர சண்டைகள் இந்த வாரம் முழுவது நடக்கும் என நெட்டிசென்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com