"செங்களம்" வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியீடு!

"செங்களம்" வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியீடு!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் செங்களம் வெப்தொடரின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது ஓடிடியில் குதித்துள்ளார். அவரது இயக்கத்தில் செங்களம் என்ற வெப் சீரிஸ் தயாராகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் கலையரசன், வாணி போஜன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இதன்ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது பலரும் படங்களையும் வெப் சீரிஸ்களையும் ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அதனையடுத்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படி வெளியாகும் வெப் சீரிஸ்கள் ஹிட்டாகவும் செய்கின்றன. இதனையடுத்து பிரபல இயக்குநர்களும், நடிகர்களும் ஓடிடி வெப் சீரிஸ் மீது தங்களது கவனத்தை திருப்பியிருக்கின்றனர். மூன்று மணி நேரத்தில் சொல்லமுடியாததை 8 எபிசோடுகளாக வெப் சீரிஸில் சொல்லலாம் என்பதால்படைப்பாளிகள் மத்தியில் வெப் சீரிஸுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

மதுரை, விருதுநகர் வட்டாரத்தில் அரசியல் அதிகாரத்திற்காக இரு குடும்பங்களுக்குள் நடக்கும் போட்டியும், அதன் விளைவாக நடக்கும் கொலைகளும் இந்த வெப் சீரிஸின் மையக்கரு என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த வெப் சீரிஸானது மார்ச் 24 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் அமீர், " ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பை பார்த்து பொறாமைப்பட்டாலே அது நல்ல படைப்பு. இதன் ட்ரெய்லரை பார்த்த போது இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்கு பொறாமை ஏற்பட்டது.

செங்களம் ட்ரெய்லரில் முதலில் என்னை கவர்ந்தது இசைதான். மிகச் சிறப்பாக இசை அமைக்கப் பட்டிருக்கிறது. காட்சிகளும் அற்புதமாக படமாக்கப் பட்டுள்ளன. இதில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. ஜீ5 ஓடிடி தளம் தொடர்ந்து நல்ல படைப்பை தந்து கொண்டிருக்கிறது. அந்த ஓடிடி தளத்திற்கு செங்களம் வெற்றி படைப்பாக அமையும்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com