பிரபல சீரியல் நடிகை நட்சத்திரா குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

நடிகை நட்சத்திரா
நடிகை நட்சத்திராIntel

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நட்சத்திரா. கேரளாவை சேர்ந்த இவர், தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தது.

இந்த நிலையில், நடிகை நட்சத்திரா கடந்தாண்டு சின்னத்திரை தயாரிப்பாளர் விஷ்வாவை திருமணம் செய்து கொண்டார். நட்சத்திராவின் திருமணம் அவசர அவசரமாக கோயில் ஒன்றில் நடைபெற்றது. இவர் தனது பாட்டிக்காக திடீர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். நட்சத்திரா திருமணம் பற்றி அவரது தோழியும், சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோ சர்ச்சையில் முடிய, எல்லா பிரச்னையும் முடிந்து இப்போது இருவரும் சேர்ந்து விட்டனர்.

அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நட்சத்திரா, தனது 5வது மாதம் மற்றும் 7வது மாத வளைக்காப்பு புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து வளைகாப்பு, பிரசவம் என அனைத்தையும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரசிகர்கள் குழந்தையின் பெயரைக் கேட்டு கமெண்ட் செய்து நச்சரித்து வந்தனர். இவர்களின் விருப்பத்துக்கிணங்க நட்சத்திரா தற்போது மகனின் பெயரை வெளியிட்டுள்ளார். குழந்தையின் பெயர் சூட்டு விழாவை விமரிசையாக நடத்தி பெயரை அறிவித்துள்ளார். ’இதழ் விஸ்வா’ என தனது மகனின் பெயரை பெயர் சூட்டு விழா புகைப்படத்துடன் ஷேர் செய்துள்ளார் நடிகை நட்சத்திரா. ரசிகர்கள் அழகான தமிழ் பெயர் வைத்ததற்கு நட்சத்திராவை பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com