kathiravan
kathiravan

பிக்பாஸ் சீசன் வரலாற்றிலே நடைபெறாத இரண்டாவது பணப் பெட்டி வாய்ப்பு!

Published on

விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது . இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் சீசன் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தான் இந்த 6 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

இதில் பிக்பாஸ் 6வது சீசன் ரசிகர்,ரசிகைகளின் சாக்லெட் பாயாக இருந்தவர் தான் தொகுப்பாளர் vj கதிரவன். பிக்பாஸில் நுழைந்ததில் இருந்து சில வாரங்கள் அவர் இருக்கிறாரா? இல்லையா ? என்பதே தெரியாமல் படு பாந்தமாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் .

இதுவரை 100 நாட்கள் வீட்டில் இருந்த கதிரவன் நேற்று திடீரென 3 லட்சத்திற்கு பிக்பாஸ் வைத்த பணப்பெட்டியை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டார். மேலும் இப்படி அவர் செய்திருக்க கூடாது என்றும் இதுதான் சரியான முடிவும் என்றும் ரசிகர்கள் மாறுபட்ட பல கருத்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.

மைனா - அமுதவாணன்
மைனா - அமுதவாணன்

அத்தோடு கடுமையான போட்டியாளர்களுக்கு நடுவில் நன்கு போட்டி போட்டு100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்துவிட்டார். நேற்று நடந்த பணமூட்டை டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் தற்போது 5 பேர்மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் அசீம் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் தான் டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அவர்கள் இருவரில் யார் அந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

இப்படியொரு நிலையில் தற்பொழுது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இரண்டாவது முறையாக பணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் வரலாற்றிலே இப்படி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால் யார் இந்த பணப் பெட்டியை எடுக்கப் போகின்றார்கள் என அனைவரும் ஆவலாக இருப்பதைக் காணலாம். அனேகமாக மைனா அல்லது அமுதவாணன் பணப்பிரதியை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com