வரப்போகுது பிக்பாஸ் 7.. முடிவுக்கு வரும் சீரியல்கள் லிஸ்ட்.!

விஜய் டிவி சீரியல்
விஜய் டிவி சீரியல்

பிக்பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்,பிக்பாஸ்ற்காக தற்போது 3 சீரியல்கள் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து வரவிருக்கும் 7வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு, அதன் புரொமோக்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் பதில் தரும் வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பிக்கும் என்கிற விபரத்தை ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், கண்ணான கண்ணே மற்றும் காற்றுக்கென்ன வேலி தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரு புறம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை நினைத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com