டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் சன் டிவி.. எந்த சீரியல் என்ன இடம்?

டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் சன் டிவி.. எந்த சீரியல் என்ன இடம்?
Updated on

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் டி.ஆர்.பி பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து வருகின்றன.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி. இதில் ஒளிபரப்பான பல சீரியல்கள் தற்போது மற்ற சேனல்களில் மறு ஒளிபரப்பாகி வருகின்றன.

மெட்டிஒலி, திருமதி செல்வம், சித்தி, கோலங்கள், ஆனந்தம், அண்ணாமலை என சன் டிவி-யின் பல சீரியல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் தற்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

முக்கியமாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் டி.ஆர்.பி பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து வருகின்றன. இதன்மூலம் பார்வையாளர்கள் மத்தியில் அந்த சேனலின் சீரியல்களுக்கு உள்ள வரவேற்பைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 10-வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பிடித்துள்ளது. 9-வது இடத்தினை விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 8-வது இடத்தை பாக்கியலட்சுமி சீரியலும் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 7-வது இடத்தினை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும், 6-வது இடத்தை சன் டிவி-யின் மிஸ்டர் மனைவி சீரியலும், 5வது இடத்தை சுந்தரி சீரியலும் பிடித்துள்ளது. 4-வது இடத்தை இனியா சீரியல் பெற்றுள்ளது. 3-வது இடம் அண்ணன் தங்கையின் பாசத்தை மையப்படுத்திய வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது. 2-வது இடத்தை எதிர்நீச்சலும், முதல் இடத்தை கயல் சீரியலும் பெற்றுள்ளன. அதாவது 10 இடங்களில் முதல் 6 இடங்களை சன் டிவி சீரியல்கள் பெற்றுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com