சீரியல் டி ஆர் பி
சீரியல் டி ஆர் பி

டிஆர்பியில் முதல் 5 இடத்தை பிடித்தது பிரபல சீரியல்கள்.. யாருக்கு முதலிடம்?

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி. இதில் ஒளிபரப்பான பல சீரியல்கள் தற்போது மற்ற சேனல்களில் மறு ஒளிபரப்பாகி வருகின்றன.

மெட்டிஒலி, திருமதி செல்வம், சித்தி, கோலங்கள், ஆனந்தம், அண்ணாமலை என சன் டிவி-யின் பல சீரியல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் தற்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

முக்கியமாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் டி.ஆர்.பி பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து வருகின்றன. இதன்மூலம் பார்வையாளர்கள் மத்தியில் அந்த சேனலின் சீரியல்களுக்கு உள்ள வரவேற்பைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் தரவரிசை மாறிவருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்துக்கான லிஸ்ட் குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.  அதன் படி கடந்த வாரம் முதல் 5 இடங்களை சன் டிவி சீரியல்களே பிடித்துள்ளன.

5வது இடத்தில் ஆல்யா மானசா நடித்துவரும் இனியா தொடரும், 4வது இடத்தில் வானத்தைப் போல தொடரும், 3வது இடத்தில் சுந்தரி தொடரும் உள்ளது. எப்பொழுதுமே முதல் இடத்தில் இருக்கும் கயல் தொடர் இந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் 11.45 டிஆர்பி புள்ளிகளுடன் எதிர் நீச்சல் முதலிடத்தில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com