நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

Vலேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.  

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவர்களின் திருமணத்திற்கு வந்தவர்கள் மொபைல்போன் பயன்படுத்த கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட உள்ளதாகவும், இதனை இயக்குநர் கௌதம்மேனன் இயக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் திருமணம் முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளத்தில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார்.  

இதனிடையே தங்களை கேட்காமல் திருமண புகைப்படங்களை வெளியிட்டதால். திருமண வீடியோவை வெளியிடும் ஒப்பந்தத்தில் இருந்து நெட்பிளிக்ஸ் பின்வாங்கிவிட்டதாகவும், இதற்காக கொடுக்கப்பட்ட தொகையை திரும்ப கேட்பதாகவும் தகவல் வெளியானது.  

இதனால் நயன்தாரா திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகுமா இல்லையா என்பது குறித்து பெரிய சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோ பதிவில், கிளிம்ப்ஸ் புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. 

 நயன் – விக்கி திருமண நிகழ்வுக்கு முன்னதாக, அவர்களின் காதல், குடும்பம் போன்ற விஷயங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப, நெட் பிளிக்ஸ் ரிலீஸ் செய்துள்ள இந்த டீஸர் வீடியோவில் நயனும் விக்கியும் தங்கள் காதல் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். 

"நயன்தாரா எல்லா வகையிலும் மிக அழகானவர்" என்று விக்னேஷ் சிவன் சிலாகித்து சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com