பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6

விஐய் டிவி பிக்பாஸ் குறித்த ட்ரெண்டிங் ஹேஷ்டேக்கள்!

கடந்த ஆக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில்கமல்ஹாசன் அடிக்கடி சொல்லும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போலஅசீமின் வெற்றி அமைந்து இருந்தது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சண்டை, கோபம், ஆத்திரம், காதல், ரொமான்ஸ் எனஅனைத்தும் நிறைந்து இருந்தது. இந்த சீசனில் அதிகம் பேசப்படும் நபராக அசீம்இருந்தார். எதற்கு எடுத்தாலும் சண்டை, வாக்குவாதம் செய்த அசீமால் வீடேஎப்போதும் ஹாட்டாக இருந்தது. இதனால், போட்டியாளர்கள் இவர் வெளியில்சென்றால் தான் நிம்மதி என நினைத்து அடிக்கடி நாமினேட் செய்தனர்.

இதுவரை 11 முறை நாமினேஷனில் சிக்கிய அசீம் எலிமினேஷன் ஆகாமல்தப்பித்தார். அதற்கு காரணம் விஜய் டிவி என்கிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிசுவாரஸ்யமாக செல்ல அசீம் இருக்க வேண்டும் என நினைத்து அவரை வாக்களித்துகாப்பாற்றினார்கள்.

இதையடுத்து, அசீம்,விக்ரமன்,ஷிவின் மூன்று பேரும் பைனலுக்கு தேர்வானநிலையில், விக்ரமன் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக வாக்குகளை பெற்ற அசீம், பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்றுவிட்டார் . இதையடுத்து, அசீமுக்கு, 50 லட்சம் ரூபாய் பரிசு பணமும், ஆடம்பர காரும் பரிசாகவழங்கப்பட்டது. இது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aseem
Aseem

இதனால் BoycottVijayTv போன்ற டாக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தது .மக்கள் பலரும் அசீம் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் கமல்ஹாசனுக்கும் அசீம் வெற்றிப்பெற்றது பிடிக்கவில்லை எனகூறிவருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

நேற்று முழுவதும் விக்ரமனுக்கு ஆதரவாகவும் அசீமிற்கு எதிராகவும் நெட்டிசன்கள்பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருகின்றனர். நேற்று முழுவதும்விஐய்டிவியை புறக்கணிப்போம் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. இது குறித்து பல்வேறு டிவிட்களும் , முகநூல் பதிவுகளும்சமூகவலைதள பக்கங்களை ஆக்ரமித்திருந்தன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com