பிக்பாஸில் இந்த வாரம் குட்பை சொல்வது இவருக்கா?

Big boss
Big boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் வாரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் தொடர்ந்து சண்டையும் சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி ஆகியோர்கள் வெளியேறியுள்ளார்கள். ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிக ஓட்டுக்களை பெற்று கதிரவன் முதல் நபராக சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கதிரவனை தொடர்ந்து ஜனனி சேவ் ஆவார். அவரை தொடர்ந்து ரச்சிதா மகாலட்சுமி இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றாலும் சற்று அதிக வாக்குகளுடன் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் பார்வையாளர் கேள்வியில் 'என்னை புடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க' என ஆடியன்ஸிடமே மைனா நந்தினி திமிராக பேசிய நிலையில், அவருக்கும் குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து குறைவான ஓட்டுக்களுடன் இருந்த மைனா நந்தினி அசீம் அமுதவாணன் பிரச்சனையில் தலையிட்டு பேசி கேம் விளையாடிய நிலையில், இந்த வாரம் அவர் தப்பித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிவினிடம்கேமுக்காக அழ வைத்த தனலட்சுமி, அசீமை அவுட்டாக்க முட்டையெல்லாம் அடித்தார். அதனால் கடுப்பான ரசிகர்கள் தனலட்சுமியின் காட்டு கத்தலால் பிக் பாஸ் பார்க்க முடியவில்லை என கதறைகிறார்கள் . அந்த காரணத்திற்காக தனலட்சுமியை வீட்டுக்கு அனுப்பி விடும் நோக்கத்தில் அவருக்கு ஓட்டே போடாத நிலையில் டேஞ்சர் ஜோனில் தனலட்சுமி உள்ளார். கேமே விளையாடாதல் வேடிக்கை பார்த்துக் கொண்டே தூங்கி வழியும் குயின்ஸி இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் கடைசி இடத்தில் உள்ளார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி தனலட்சுமி, குயின்ஸி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்களில் ஒருவரே வெளியேறுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த வாரம் சனிக்கிழமை கமல்ஹாசன் வருவார் .

இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ள குயின்ஸி தான் வெளியேறுவார் என கருத்துக் கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இந்த வாரம் குயின்ஸிக்கு குட் பை சொல்ல பிக் பாஸ் ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com