பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்?

பிக்பாஸ்
பிக்பாஸ்

விஐய் டிவியின் பிக்பாஸ் 6வது சீசன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே சூடு பிடிக்க பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.மேலும் அந்தளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு குறையாமல் சண்டை சச்சரவு ,விவாதங்கள் என பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அதிலும் வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்று வருகிறது.

அதிலும் ரசிகர்கள் வெளியேற வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்று ரசிகர்கள் மகிழந்து வருகிறார்கள். முதல்முதலாக ஜி.பி.முத்து தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன் பிறகு முதல் எலிமினேஷனில் சாந்திவீட்டைவிட்டு வெளியேறினார். மேலும் அவரை தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் தாறுமாறாக தவறாக நடந்துகொண்ட அசல் கோளாறு வெளியேறினார்.

ஆயிஷா
ஆயிஷா

மேலும் அவர் வீட்டைவிட்டு வேளியே வந்தது மக்களுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது, மக்களின் கணக்கு படி தான் நிகழ்ச்சி செல்கிறது என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.

தற்போது இந்த வார எலிமினேஷனுக்காக விக்ரமன், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் இடம் பெற்றுள்ளனர். அத்தோடு விக்ரமன் முதல் இடத்தில் இருக்க செரினா கடைசி இடத்தில் இருக்கிறார்.

செரினா
செரினா

செரினாவிற்கு முந்தைய இடத்தில் ஆயிஷா உள்ளார். எனவே செரினா அல்லதுஆயிஷா இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் கமல் தலைமையில் பெரும் பஞ்சாயத்து விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். எனவே இந்த வாரம் யார் வீட்டினில் இருப்பார்கள் யார் வெளியேறுவார்கள் என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com