கதிர் - நிவாஷினி - குயின்சி
கதிர் - நிவாஷினி - குயின்சி

பிக்பாஸ் இல்லத்திலிருந்து யார் வெளியேறுவார்? கதிரா? குயின்ஸியா? நிவாஷினியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்பொழுது 5 போட்டியாளர்கள் வெளியாகி 16 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் இருந்து இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் தொடர்ந்து சண்டையும் சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி ஆகியோர்கள் வெளியேறியுள்ளார்கள். முக்கியமாக ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ஏழு பேர் இடம் பெற்று இருக்கிறார்கள் அதில் ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, ஆயிஷா, விக்ரமன், அசீம், கதிரவன் ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, நிவாஷினி ஆகிய மூவரும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இவ்வாறு இந்த மூன்று பேரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் முக்கியமாக ராபர்ட் மாஸ்டர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது ஆனால் ரசிகர்கள் மத்தியில் அதிக வெறுப்பினை சம்பாதித்து இருப்பவர் இவர் தான். இருந்தாலும் இவரை விட இந்த வாரம் நிவாஷினி குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது ஏனென்றால் ராபர்ட் மாஸ்டர் தான் ரக்ஷிதாவிடம் தொடர்ந்து நெருங்கி பழகி வருகிறார் எனவே அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி குயின்ஸி, கதிர், நிவாஸினி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்களில் ஒருவரே வெளியேறுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் வருவார் . ராஜா ராணி டாஸ்கில் நடைபெற்ற கோக்குமாக்கு தனங்களை விசாரணை செய்து இறுதியில் மூவரில் ஒருவரை வெளியேற்றுவார் என எதிர்பார்க்க படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com