பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வெல்லப்போவது யார்?

பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வெல்லப்போவது யார்?

பிக்பாஸ் சீசன் 6 கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது 105 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைய இருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய சீசன் 3 தற்போது மூன்று பேராக சுருங்கி இருக்கிறது.

நேற்று ஷிவின், அமுதவாணன், மைனா, விக்ரமன், அசீம் என ஐந்து போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில் அமுதவாணன் பணபெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மைனாவை மிட்நைட் எவிக்‌ஷன் என்ற பெயரில் எலிமினேட் செய்து வெளியே அனுப்பிவிட்டனர்.

இறுதி வாரம் என்பதால் முன்பு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரையும் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே வந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜனனி மட்டும் உள்ளே வரவில்லை. மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உள்ளே வந்திருந்தனர்.

கடந்த வாரம் பணமூட்டை வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை வித்தியாசமாக இரண்டு முறை பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பணம் மூட்டை வைக்கப்பட்டு, மூன்று லட்சத்துடன் பேரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேரத்தை விறுவிறுப்பாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதிரவன் உடனடியாக மூன்று லட்ச ரூபாய் எடுத்து அந்த டாஸ்கின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டார். எனவே மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அனைத்து சீசன்களிலும் பணப்பெட்டி டாஸ்க் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற விரும்பும் போட்டியாளர்கள் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படும் வரை காத்திருந்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

Big boss
Big boss

அதிக பட்ச பணமாக தற்போது அமுதவாணன் 11,75,000 ரூபாயை எடுத்துச் சென்று இருக்கிறார் அமுதவாணன். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக மைனாவை மிட் வீக் எலிமினேஷன் என்று சொல்லி அனுப்பிவைத்து விட்டனர்.

தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மூன்று பேரும் தங்களுக்கு வாக்களிக்க சொல்லி மக்களிடம் பேசுவது போன்ற ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இந்த சீசனில் மட்டும் தான் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியாத அளவில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அனேகமாக சனிக்கிழமையான இன்று சிவின், அசீம், விக்ரமன் என மூவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்க படுகிறது.. நாளை இறுதி போட்டியில் இருவர் மேடையில் இருப்பார்கள். பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லப்போவது யார் என நாளை தெரிந்துவிடும்.

நாளை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்ச்சிகள் ப்ரம்மாண்டமாக நடைபெறும். இறுதியில் வென்றவருக்கு பிக்பாஸ் டைட்டிலோடு ஐம்பது லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com