இந்த வாரம் வெளியேறப்போவது யார்? மைனாவா? மணிகண்டனா?

Maina -  Manikandan
Maina - Manikandan

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது ஒன்பது போட்டியாளருடன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது, இருப்பினும் நிகழ்ச்சியானது இன்னமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தனலட்சுமி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அவருக்கு மக்கள் ஆதரவு இருந்த போதும் ஏன் வெளியேறினார் என்று தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பி போய்விட்டனர். தனலட்சுமி வெளியேறியதை அடுத்து தற்போது ஒன்பது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

இந்த வாரம் நாமினேஷனில் ரச்சிதாவை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மேட்களும் ரெட் கார்டு வாங்கி நாமினேட் செய்யப்பட்டனர். விக்ரமன், ஷிவின், அசீம், மணிகண்டன், கதிர், மைனா, அமுதவாணன், ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற கருத்துக் கணிப்பு ரிசல்ட்டுகள் தற்போது வெளியாகி உள்ளன.

மைனா - அமுதவாணன்
மைனா - அமுதவாணன்

இந்த வாரமும் சனிக்கிழமை எபிசோடிலேயே முதல் ஆளாக விக்ரமன் சேவ் ஆகப் போகிறார் என்றும் 2வதாக ஷிவின் சேவ் ஆவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல வாரங்களாக விக்ரமன் முதல் ஆளாக சேவ் ஆகி வருகிறார். கதிர் மற்றும் அமுதவாணன் அடுத்து சேவ் செய்ய படலாம். இந்த வாரமும் அசீம் ஹாட் சீட்டில் அமர வாய்ப்புள்ளது.

ஆனால் கருத்துக் கணிப்பில் கடைசி இடத்தில் மைனா மற்றும் மணிகண்டன் இருவருமே சிறிய அளவிலான இடைவெளியில் தான் உள்ளனர். ஆனால், தொடர்ந்து 3 வாரங்களாக பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் மணிகண்டன்தான் வெளியேறுவார் என பலரும் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

இத்தனை வாரங்களாக மணிகண்டனை சேவ் செய்து உள்ளே வைத்ததே அவரது சகோதரி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வருவார் என்பதற்காகத் தான் என்றும் மைனாவின் கணவர் மற்றும் குழந்தை வர வேண்டும் என்பதற்காகத் தான் மைனாவையும் உள்ளே வைத்துள்ளனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ வெளியேற போவது யார்? என ஞாயிற்று கிழமை தெரிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com