குறைவான ஒட்டா? வெளியேறுவாரா மைனா நந்தினி?

பிக்பாஸ் நிலவரம் !
மைனா - அமுதவாணன்
மைனா - அமுதவாணன்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 72 நாட்களைக் கடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களால் நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர் . அதில் பலர் வெளியேறிய நிலையில், இலங்கையில் இருந்து பிக்பாஸில் கலந்து கொண்டவர் ஜனனி கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார். இவர் ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்துவந்தார்.பின்னர் ரசிகர்களால் கவரப்பட்டார். இருப்பினும் அமுதவாணனுடன் இவர்காட்டிய நெருக்கம் தான் ரசிகர்களை கடுப்பாக்கி வெளியேறச் செய்தது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்கள் வெளியேறி வருவது வழக்கமே. அந்தவகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜனனியை கமல் எவிக்ட் செய்திருந்தார்.

மேலும் இந்த வாரம் மணிகண்டன் மற்றும் ஏடிகே இருவரில் ஒருவர் நாமினேஷனுக்கு வந்தால் அவர்கள் நிச்சயம் வெளியேறி விடுவார்கள் என்று தெரிந்தே இருவரையும் பிக்பாஸ் வீட்டில் காப்பாற்றி விட்டனர் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் குவிகின்றன. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் இந்த வாரமும் எஸ்கேப் ஆகி உள்ளார். ஏடிகேவை யாருமே நாமினேட் செய்யவில்லை.ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் வரை மணிகண்டன் உள்ளே இருப்பார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கம் போல இந்த வாரமும் அசீம், விக்ரமன், தனலட்சுமி உள்ளிட்ட நபர்கள்

நாமினேட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரச்சிதா, மைனா நந்தினி, கதிரவன் உடன் முதல் முறையாக ஷிவின் கணேசன் நாமினேட் ஆகி உள்ளார். இந்த 7 பேரில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்துயார் வெளியேற போகிறார் என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வியாக தற்போதுஎழுந்துள்ளது.

அந்த வகையில் இந்த வார ஓட்டிங் லிஸ்ட்டில் குறைவான ஓட்டுக்களுடன் மைனா நந்தினி கடைசி இடத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் இந்தவாரம் மைனா நந்தினி வெளியேற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com