புது அவதாரத்துடன் களத்தில் இறங்கும் ரஜினி! எந்த வேடத்தில்தான் நடிக்கிறார் தெரியுமா?

புது அவதாரத்துடன் களத்தில் இறங்கும் ரஜினி! எந்த வேடத்தில்தான் நடிக்கிறார் தெரியுமா?

அன்று முதல் இன்று வரை தனக்கான மாஸ் குறையாமல் டாப் ஹீரோவாகவே வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஸ்டைல் இன்றளவும் மக்களால் கவரப்படுவதால்தான், 70 வயதைக் கடந்தும் ஹீரோவாக இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், அடுத்து இயக்குநர் நெல்சனுடன் கைகோர்த்து 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கும், இப்படத்தில் ரஜினிகாந்த்தும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி டைட்டில் போஸ்டரில் ரஜினிகாந்த் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் கேமியோ ரோல் செய்யும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

'லால் சலாம்' திரைப்படத்தில் கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விக்ராந்தின் அப்பாவாக நடிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக ரஜினியின் நடிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படமான ’கோச்சடையான்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த், இயக்கி இருந்த நிலையில், இன்னொரு மகள் ஐஸ்வர்யா இப்போது முதல் தடவையாக ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com