'ப்ரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் மறைவு:திரையுலகினர் அஞ்சலி!

இயக்குநர் சித்திக்
இயக்குநர் சித்திக்

டிகர் விஜய் நடித்த 'ப்ரெண்ட்ஸ்', 'காவலன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக்(69) நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக். 1989ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்பாதர்', 'வியட்நாம் காலனி', 'ஹிட்லர்' உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான 'ப்ரெண்ட்ஸ்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த 'சாது மிரண்டா', விஜய் நடித்த 'காவலன்', அரவிந்த்சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களை இயக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சித்திக்.  கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்தச் செய்தி மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com