கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

-வீர ராகவன்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று (மே 17) கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழ்த் திரைத் துறை நட்சத்திரங்களான கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் வருடந்தோறும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற  கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இம்மாதம்  28-ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன

இவ்விழாவில் இந்தியா சார்பில்  மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் .ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில், ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்கிய முதல் படமான 'லி மஸ்க்' திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது

''கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கெடுப்பது மிகப் பெரிய கவுரவம்தான். அதிலும் நான் இயக்கிய முதல் படம் இங்கு திரையிடப்படுவதில் மிகவும்  உற்சாகமாக இருக்கிறேன்'' என்ற ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்தார்..

''மொத்தமே 36 மிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய 'லி மஸ்க்திரைப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை, அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதுதான் கதை!

இந்த படத்தில் நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்'' என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவன் இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்ரி' திரைப்படமும் வெளியிடப் படவுள்ளது. மேலும் கமல்ஹாசனின் ''விக்ரம்' படத்தின் டிரெய்லரும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com