மேடையில் ஜிபி முத்துவும் சன்னி லியோனும் செய்த காரியம்... இப்டி பின்றீங்களே பாஸ்!

மேடையில் ஜிபி முத்துவும் சன்னி லியோனும் செய்த காரியம்... இப்டி பின்றீங்களே பாஸ்!

டிக் டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜிபி முத்து. அப்படி பிரபலமானதைத் தொடர்ந்து பிரபல என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவருக்கு அழைப்பு வந்து, அதிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

வெகுளித்தனமான பேச்சால் கமல்ஹாசனிடமே, ஆதாமா யாரு? அப்டின்னு கேட்டு டஃப் கொடுத்தது முதல் அவருடைய செயல்கள் அத்தனையும் ரசிகர்களால் கவரப்பட்டு வந்தது. மக்கள் ஆதரவோடு அவர் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மகனின் உடல்நிலை பிரச்சினையால் மனமுடைந்துபோன ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், சமீபத்தில் சன்னி லியோனுடன், சதீஷ், யோகிபாபு, ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சன்னிலியோன், சதீஷ் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஜிபி முத்துவும் கலந்து கொண்டார்.

இந்த வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் ஜிபி முத்துவிடம் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்ததோடு, சில நிமிடங்களில் ஜிபி முத்துவும், சன்னிலியோனும் மேடையில் ஐக்கியமானார்கள்.

இந்நிலையில் முதலில் சன்னி லியோனுக்கு ஜிபி முத்து பால்கோவாவை தன் கைகளால் ஊட்டிவிட, அடுத்து சன்னி லியோன் ஜிபி முத்துவுக்கு பால்கோவா ஊட்டிவிட அரங்கமே கரகோஷத்தில் ஒலித்தது.

அதுமட்டுமா... ஜிபி முத்துவிடம், சன்னி லியோன் பற்றி கவிதை சொல்லும்படி கேட்டுள்ளனர். அட கவிதை என்னங்க கவிதை... குத்தாட்டமே போடலாம் என்றபடி சன்னி லியோனும் ஜிபி முத்துவும் மேடையில் குத்தாட்டம் போட்டு அரங்கத்தையே அதிர வைத்தனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com