இந்த பெண்ணா... அந்த நடிகர்? வைரலாகும் புகைப்படம்...

இந்த பெண்ணா... அந்த நடிகர்? வைரலாகும் புகைப்படம்...

அன்றைய காலகட்டத்தில் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் 1995களில் பிரபல ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரமேஷ் அரவிந்த்.

உன்னால் முடியும் தம்பி, பெண்மணி அவள் கண்மணி, கேளடி கண்மணி, வசந்தகால பறவை, இதய வாசல், மகராசன், சதிலீலாவதி, டூயட், பஞ்சதந்திரம் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். அதுமட்டுமல்லாமல் உலகநாயகனின் நெருங்கிய நண்பராகவும் கருதப்படும் ரமேஷ் அரவிந்த், அவ்வை சண்முகி, சதிலீலாவதி, பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு உட்பட படங்களில் நடித்ததோடு, கமலை வைத்து உத்தம வில்லன் படத்தை இயக்கினார்.

இதுவரையிலும் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரமேஷ் அரவிந்த், கன்னட திரையுலகில் பல விருதுகளை வாங்கியுள்ளதோடு, இன்றும் கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.

இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது வேறுயாருமல்ல, 1997ல் வெளியான கன்னடப் படத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் பெண் வேடத்தில் நடித்திருந்த போது எடுக்கப்பட்ட படம் தான் இது.

இத்தனை வருடங்களுக்குப் பின் பெண் வேடத்தில் இருக்கும் அந்த புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com