பொன்னியின் செல்வன் டிரெய்லர்; இன்று பிரமாண்ட வெளியீடு!

பொன்னியின் செல்வன் டிரெய்லர்; இன்று பிரமாண்ட வெளியீடு!

அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக வெளியிடப் பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து 'பொன்னியின் செல்வன்' படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெறவுள்ளது . இதில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் பாடல்களைத் தனது இசைக்குழுவுடன் நேரலையில் நிகழ்த்தவுள்ளார்.

மேலும் இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள்.'பொன்னியின் செல்வன்' பாகம் 1  படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் குரலில் வெளியிடப்படும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com