நடிகை பிரியங்கா சோப்ரா கணவரை விவாகரத்து? பாலிவுட்டில் பரபரப்பு!

நடிகை பிரியங்கா சோப்ரா கணவரை விவாகரத்து? பாலிவுட்டில் பரபரப்பு!

-சாந்தி கார்த்திகேயன்.

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் கணவர் நிக் ஜோன்ஸை விவாகரத்து செய்யப் போவதாக எழுந்த தகவலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையானார். இந்நிலையில் குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதையடுத்து ஹாலிவுட்டில் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்கள் என படு பிஸியாக உள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து, கடந்த 2018 ஆண்டு திருமணம் செய்தனர். அவ்வப்போது கணவருடன் தான் எடுத்துகொண்ட போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும் சேர்ந்து வீடு வாங்கினர். அந்த வீட்டில் தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடிய அவர்கள் அந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜோனஸ் பெயரை திடீரென நீக்கியுள்ளார். இதைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

"உங்களுக்குள் விஷயங்கள் சரியாக செல்கிறதா? அல்லது ஏதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா?'' என கேட்டு வருகின்றனர். ஆனால் பிரியங்காவும் சரி.. நிக் ஜோனஸும் சரி.. இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கின்றனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com