பல கோடி மதிப்புடைய 2 வீடு... இந்தா, கிஃப்டா வச்சுக்கோ... வாரிக் கொடுத்த ஆலியா பட்! யாருக்கு தெரியுமா?
இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆலியா பட். இவர், 1999ல் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியான 'சங்கார்ஷ்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், 2012 ல் வெளியான 'ஸ்டூடன்ட் ஆஃ தி இயர்' படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படத்தில் அவரது நடிப்பு சரியாக வெளிப்படவில்லை.
இருந்தும், அடுத்தடுத்து வெளியான 'ஹைவே', '2 ஸ்டேட்ஸ்' திரைப்படங்கள் அவருக்கு இந்தி திரையுலகில் நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அவரது சினிமா வாழ்க்கையும் விரிவடைய ஆரம்பித்தது. தொடர்ந்து பல ஹிட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, பிரபல நடிகரான ரன்பிர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், நடிகை ஆலியா பட், தற்போது பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள 2,497 சதுர அடியில் வாங்கியுள்ள அபார்ட்மெண்ட் வீட்டின் விலை சுமார் 37 கோடி ஆகும்.

அதே நேரத்தில், நடிகை ஆலியா பட் தனது சகோதரி ஷாஹீனுக்கு அதே நாளில் 2 பிளாட்டையும் பரிசாக வழங்கியுள்ளார்.
ஜூஹுவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில், இரண்டு பிளாட்களை தனது 35 வயதான சகோதரி ஷாஹீனுக்கு பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7.50 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.