7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2: புதிய அப்டேட்டுகள்!

7G rainbow colony
7G rainbow colony

2004 ஆம் ஆண்டு வெளியாகி தற்போதும் குறிப்பிடத்தக்க காதல் திரைப்படங்களினுடைய வரிசையில் 7 ஜி ரெயின்போ காலனி படத்திற்கு தனி இடம் உண்டு. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் செல்வராகவன் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கி உள்ளார்.

2004 ஆம் ஆண்டு வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரை தமிழ்நாட்டின் இளைஞர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

இந்தப் படத்தை நடிகர் தனுஷின் சகோதர செல்வராகவன் இயக்கினார். மேலும் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டரும் நடித்துள்ளனர். படம் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியாகி இரண்டு மொழிகளிலும் பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தினுடைய இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். மேலும் படத்தினுடைய கதை, திரைக்கதை ஆகியவற்றை தயார் செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் தேர்வு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த பாகத்திலும் கதாநாயகனாக ரவி கிருஷ்ணா ஒப்பந்தமாகி உள்ளாராம். மேலும் கதாநாயகியாக மலையாள நடிகை அனுஸ்வரா ராஜன் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இவர் சூப்பர் சரண்யா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இந்த படம் தற்போதைய காதல் முறைகளை கதையாக கொண்ட படமாக உருவாகும் என்று சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com