சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு நடிக்க மறுக்கும் காமெடி நடிகர்!

சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு நடிக்க மறுக்கும் காமெடி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெளிவந்த எல்கேஜி, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா மற்றும் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. தனது நடிப்பின் மூலம் வேகமாக வளர்ந்து வரும், தற்சமயம் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தம் கைவசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம் ‘லெக்பீஸ்.’ இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு, அதற்கான சம்பளத்தையும் பெற்றுக்கொண்ட ரெடின் கிங்ஸ்லி, தற்போது அப்படத்தில் நடிக்க மறுப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள அந்தப் புகாரில், ‘‘தனது தயாரிப்பில் உருவாகிவரும், ‘லெக்பீஸ்’ திரைப்படத்தில் பத்து நாட்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டு, அதற்கான முழு சம்பளமும் பெற்றுக் கொண்டார் ரெடின் கிங்ஸ்லி. ஆனால், நான்கு நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்துள்ள நிலையில், தற்போது அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனக்கு நஷ்டம் ஏற்படுத்திய அந்தத் தொகை ரெடின் கிங்ஸ்லியிடம் இருந்து எனக்கு நஷ்டஈட்டுத் தொகையாகப் பெற்றுத் தர வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து நடிகர் ரெடின் கிங்ஸ்லியிடம் தயாரிப்பாளர் சங்கம் அவர் தரப்பு விளக்கத்தைக் கேட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com