8 வருடம் கழித்து வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பிரபல நடிகர்! உச்சத்துக்கு போகும் பிரதீப் மார்க்கெட்!

8 வருடம் கழித்து வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பிரபல நடிகர்! உச்சத்துக்கு போகும் பிரதீப் மார்க்கெட்!

திரைத்துறையைப் பொறுத்தவரை ஒருவர் ஜெயித்து முன்னுக்கு வருவது மட்டுமல்லாமல், அதிலும் முன்னணி இடத்தைப் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

அப்படியிருக்க, தனது முதல் படத்திலேயே எட்டா உயரத்தைப் பிடித்து, பிரபலமானவர் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன்.

ஆரம்பத்தில் சில குறும்படங்களை எடுத்திருந்த பிரதீப், 2019ல் பெரிய திரையில் ஜெயம் ரவியை வைத்து 'கோமாளி' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் பெரிய அளவுக்கு வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது 'லவ் டுடே' என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இப்படத்தை இவரே எழுதி இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

தற்போது திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், வெளியான முதல்நாள் அன்று பெரிதாக கண்டுகொள்ளப் படவில்லையென்றாலும், ஓரிரு நாட்களில் இமாலய வெற்றியைத் தொட்டது. முதல் நாள் வசூல் சில கோடிகளே இருந்தாலும், பத்து நாட்களின் வசூல் 50 கோடியை தாண்டி டாப் கியரில் இன்றும் ஹவுஸ்புல் காட்சிகளாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் இன்றைய இளைஞர்களைக் கவரும் விதம் அமைந்துள்ளதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்.

இதனால் பிரதீப்பின் மார்க்கெட் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், பிரபல நடிகரான பிரேம்ஜி, உங்கள் அடுத்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க சார் என்று கெஞ்சியபடி ட்விட்டரில் பிரதீப்பிடம் கேட்டுள்ளார்.

முன்னதாக, 2014 இல் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படமான ‘வாட்ஸ் அப் காதல்’ குறும்படத்தின் லிங்கை நடிகர் பிரேம்ஜியுடன் பகிர்ந்து ‘பிடிச்சிருந்தா ஷேர் செய்து சப்போர்ட் பண்ணுங்க சார்’ என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த சமயம் கண்டுக்காத பிரேம்ஜி, தற்போது 8 வருடம் கழித்து அந்த ட்வீட்டுக்கு ரீட்வீட் செய்து அடுத்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க சார் என்று கெஞ்சியது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஒரே படத்தில் பிரதீப்பின் மார்க்கெட் இந்தளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இவரது அடுத்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com