ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சொந்த வீடு!

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சொந்த வீடு!

பாலிவுட் பூமராங்!

மிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்சமயம் தெலுங்கில் சுகுமார் எழுதி இயக்கி வரும் ‘புஷ்பா 2’ என்கிற பான் இந்தியா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் நடித்து வருவதால் அந்தந்த மாநிலத்தில்  ஷுட்டிங்கில் பங்கேற்கும்போது நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதை விரும்புவது கிடையாது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொந்த வீடு வாங்கி, அங்கே தனது தங்கையுடன் குடியேறுகிறார்.

பல்வேறு மொழிகளில் நடிக்க அழைப்பு வந்தாலும், பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கு, சரித்திரக் கதையம்சம் கொண்ட படத்தில் மகாராணி கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி போஸ்லே வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் சரித்திரப் படம் உருவாக்கப்படுகிறது. இதில் சம்பாஜி மன்னன் கதாபாத்திரத்தில் விக்கி கெளஷல் நடிக்க, அவரது மனைவி இயேசுபாய் கேரக்டரில் ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மன்னன் யுத்தத்திற்குச் செல்கையில், மகாராணியான இயேசுபாய் எத்தகைய அரசியல் முடிவுகளை எடுத்தார் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

கதையைக் கேட்ட ராஷ்மிகா மந்தனா உடனே நடிக்க சம்மதித்துவிட்டார். லட்சுமண் உத்தேக்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

(அடேங்கப்பா! மகாராணிக்கு மாநிலந்தோறும் வீடு! நடக்கட்டும்! என்ஜாய்!)

“காதலுக்கும் ராசி வேண்டும்!”

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சினேகா உள்ளல், கத்ரினா கைஃப், ஜெர்மன் மாடல் நடிகை லூலியா போன்ற பலரைக் காதலித்தாகக் கூறப்பட்டது. பல்வேறு காரணங்களால், இவர்கள் எல்லோரும் சல்மான்கானை விட்டுப் பிரிந்தனர்.

தற்போது “கிஸி கா பாய்! கிஸி கி ஜான்!” இந்திப் படத்தில் ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டேயுடன் காதல் மலர்ந்துள்ளதாக இந்திப்பட உலகினர் பேசி வருகிறார்கள். இதுபற்றி சல்மான்கான் அளித்த பேட்டியில், “காதல் எனக்கு ராசியானதாக இல்லை. நடிகைகளுக்கு நான் ‘பாய்’ (brother) தான். நான் விரும்பும் பெண் என்னை “ஜான்” என்றழைக்க வேண்டும். ஆனால் அவரும் என்னை ‘பாய்’ என்றே அழைக்கிறார். நான் என்ன செய்வது?” என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

சல்மான்கானுடன் காதல் இல்லையென்று பூஜா ஹெக்டேயும் மறுத்துள்ளார்.

(“எல்லாத்துக்கும் ஒரு ராசி தேவை! சரிதானே!”)

204 கோடி வைர நெக்லஸ்!

நியூயார்க் அமெரிக்காவில் நடந்த ‘MET GALA’ (மெட் காலா)  நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை அலியா பட் 1 லட்சம் முத்துக்களால் ஆன ஆடை அணிய, பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ` 204 கோடி பெறுமானமுள்ள வைர நெக்லஸ் அணிந்து வலம் வந்தார்.

வருடாந்திர நிதி திரட்டும் பேஷன் நிகழ்ச்சி MET GALA ஆகும். இதில் 2017 முதல் பிரியங்கா சோப்ரா பங்கேற்று வருகிறார். தனது காதல் கணவர் நிக் ஜோனாஸுடன் சிகப்புக் கம்பளத்தில் பிரியங்கா நடந்து வந்தது, நிகழ்ச்சியின் “Couple goal” (கப்பிள் கோல்) அங்கீகாரத்தைப் பெற்றது. பிரியங்காவின் வாலண்டினோ உடை மற்றும் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்ட 11.6 கேரட் வைர நெக்லஸ் சூப்பராக இருந்தது. ஃப்ளூ லகூன் வகையைச் சேர்ந்த நெக்லஸின் விலை ` 204.5 கோடி.

இந்த வைர நெக்லஸ்  மெட் காலா 2023 நிகழ்ச்சிக்குப் பின் ஏலம் விடப்படுமென கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் நெக்லஸ்  போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.

(பணமிருந்தால் மட்டும் போதாது. அனுபவிக்கத் தெரியணும் கண்ணு!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com