“வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு!”

“வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு!”

‘டன்கி’ இந்திப் படத்தில் ஷாருக்கானுடன் நடிப்பதினால், நடிகை டாப்ஸி மிகவும் மகிழ்ச்சியுடனிருக்கிறார். “இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, இப்படத்தில்  சும்மா ஒரு மரம் போல் நின்றால் போதுமென்று கூறியிருந்தால்கூட செய்திருப்பேன்” என்று அவர் கூறியிருப்பது அவரது அளவற்ற மகிழ்ச்சிக்கு சான்றாக அமைகிறது.

“ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கான் கூட்டணியில் இருப்பதே பெருமை. இப்படத்தில் அழகான காதல் கதை இருக்கிறது. இத்தகைய வாய்ப்பு வாழ்நாளில் ஒருமுறை மட்டும் கிடைக்கும் வாய்ப்பாகப் பார்க்கிறேன். இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்ட புதுப்புது விஷயங்களுடன் தினமும் வீடு திரும்புகிறேன். பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை கடந்த 9 வருடங்களாகக் காதலித்து வருகிறேன். காதல் தொடர்ந்தாலும், அது பற்றிப் பேசுவதை விரும்பவில்லை.

எனக்கு எந்தப் போட்டியும் இல்லை. இயல்பாகச் செல்லும் வாழ்வில் நிம்மதியாக இருக்கிறேன்” என்கிறார்.

‘டாப்’ டாப்ஸி!

சாக் ஷி தோனியின் எல்.ஜி.எம்.

ல்வேறு மொழிகளில் திரைப்படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக் ஷியுடன் இணைந்து ‘டோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் எல்.ஜி.எம். (லெட்ஸ் கெட் மேரீட்)

ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தின் ஷுட்டிங் சென்னையில் வேகமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பொறுப்பையும் ரமேஷ் ஏற்றுள்ளார். ஹரீஷ் கல்யாண் இவானா ஜோடியாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நதியா, யோகிபாபு நடிக்கின்றனர். முழுப் படமும் தற்சமயம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

“சாக் ஷி தோனியின் கருத்தாக்கத்தை வைத்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைக்கதையாக ரமேஷ்  தமிழ்மணி உருவாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சாக்ஷி தோனி தொடர்ந்து கதை எழுத திட்டமிட்டு இருப்பதாகவும், தனது கணவர் தோனியை நடிக்க வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதென டோனி என்டர்டெயின்மென்ட் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கவலைப்படாத அக் ஷய்!

பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாரின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. தற்சமயம் மலையாளப் படம் ‘டிரைவிங் லைசென்ஸ்’லிருந்து இந்தியில் ரீமேக்கான ‘ஸெல்ஃபி’யில் அக் ஷய் குமார் நடித்தார். அக் ஷய் குமார் படங்களில் மிகவும் குறைந்த முதல்நாள் வசூல் கொண்ட படம் இதுதான் எனக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால் அதிக நம்பிக்கை வைத்திருந்தது ஏமாற்றத்தை அளித்தது.

“”நான் ஒரே நேரத்தில் 16 தோல்விப் படங்களைக் கொடுத்தவர். தோல்வி புதிதில்லை. இதற்கு நானே காரணம். மக்களின் ரசனைக்கேற்ப மாற வேண்டியது அவசியம்” என்று அக் ஷய் குமார் கூலாக கூறிவிட்டு நடிகைகளுடன் அயல்நாடு டூர் கிளம்பிவிட்டார்.

“அக் ஷய் குமார் என்டர்டெய்னர்ஸ் யுஎஸ் டூர்’ என்கிற நிகழ்ச்சியை  அமெரிக்காவிலுள்ள பல்வேறு நகரங்களில் நடத்த முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாலிவுட் நடிகைகள் சோனம் பஜிவா; மெளனிராய் ஆகியோருடன் விமானத்தில் அமெரிக்கா சென்றுவிட்டார் அக் ஷய்

தோல்வி கண்டு துவளாத அக் ஷய்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com