
–ராகவ் குமார்.
''ஆனந்தம் விளையாடும் வீடு'' என்ற ஒரு படத்தின் பாடல் வரியையே தன் படத்தின் டைட்டிலாக வைத்து இருக்கிறார் டைரக்டர் நந்தா பெரியசாமி.
தமிழில் ஒரு கல்லூ ரியின் கதை உட்பட ஓரிரு படங்களை இயக்கிய நந்தா ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்தார்.இந்த காத்திருப்புக்கு நடுவில் கடந்த ஆண்டு ஹிந்தியில் நந்தா எழுத்தில் உருவான ரேஷ்மி ராக்கெட் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.இருந்தாலும் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குடும்ப கதையை தேர்வு செய்து இயக்கியுள்ளார்.
''குடும்ப உறவுகளும்,கூட்டுகுடும்பமும் அரிதாகும் இந்த சூழலில் இது போன்ற படம் தேவை'' என்கிறார்.
கெளதம் கார்த்தி,சேரன் இணைந்து நடிக்கும் இப்படத்தில்,இருபதிற்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜ சேகர் –ஜீவிதா வின் மகள் ஷிவாத்மிகா தமிழில் முதன்முறையாக இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்
இப்படத்தில் மற்றொரு சுவாரசியம் உள்ளது. டைரக்டர் சேரன் தான் நடிப்பதற்காக 20 வருடம் முன்பு பதிவு செய்து வைத்திருந்த டைட்டில் ''ஆனந்தம் விளையாடும் வீடு'' என்பது! ஆனால் சேரனால் அப்போது இந்ததலைப்பில் நடிக்க முடியவில்லை. சேரன் கண்ட கனவு இப்போது நினைவாகி உள்ளது. தான் நடிக்க விரும்பிய ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடித்து உள்ளார்.
இன்றய தமிழ் குடும்பங்களின் கனவாக உள்ள கூட்டு குடும்ப அமைப்பும், அன்பும், மகிழ்ச்சியையும் இப்படம் தரட்டும். –ராகவ் குமார்.