
பெண் இயக்குனர் மதுமிதா தமிழில் இயக்கிய படம் கே.டி. என்கிற ‘கருப்பு துரை’யின் 70 வயது முதியவருக்கும் 8 வயது சிறுவனுக்குமிடையே உள்ள பாசம் பற்றி காட்டப்பட்டுள்ளது.
சிறுவன் கேரக்டரில் நடித்த நாகவிஷாலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் மதுமிதா ஈடுபட்டுள்ளார். இக்கதையை அபிஷேக்பச்சனிடம் கூற, அவருக்குப் பிடித்துப் போனது. 70 வயது முதியவராக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்கிற படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேகபச்சன் நடித்து வருகிறார். தமிழ்ப்படங்களின் ரீமேக்கிலும் நடிக்க அபிஷேக்பச்சன் தயாராக இருப்பதாக சினிமா வட்டாரம் சொல்கிறது.