தங்கலான் படப்பிடிப்பில் விபத்து! விக்ரமுக்கு என்னாச்சு!

தங்கலான் படப்பிடிப்பில் விபத்து! விக்ரமுக்கு என்னாச்சு!

'சியான்' விக்ரம் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின், பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.

கோலார் தங்கவயல் பகுதியை மைய்யமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பும் சில வாரங்களுக்கு முன்புவரை விறுவிறுப்பாகவே நடந்துவந்தது.

இதையடுத்து, 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான ப்ரமோஷன் காரணமாக அப்படத்தில் இடம்பெற்ற விக்ரம் உட்பட நடிகர் நடிகைகள் என அனைவரும் ஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வந்தனர்.

இதையடுத்து தற்போது மீண்டும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் பா.ரஞ்சித் துவங்கியுள்ளார். இதற்காகவே இப்படத்தின் நடிகை மாளவிகா மேனனும் தனது உடம்பை சிக்ஸ் பேக் ரேஞ்சிற்கு மாற்றி புகைப்படங்களை வெளியிட்டு, அதகளப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது நடந்த படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது, விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சில வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் 'தங்கலான்' படப்பிடிப்பில் தற்சமயம் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com