சைக்கிள் டயரை ஓட்டிய நடிகர் அஜித்! மகளுக்காக 90's கிட்ஸ்ஸாக மாறிய அஜித்தின் வைரல் வீடியோ!

சைக்கிள் டயரை ஓட்டிய நடிகர் அஜித்! மகளுக்காக 90's கிட்ஸ்ஸாக மாறிய அஜித்தின் வைரல் வீடியோ!
Published on

பிரபல நடிகர்களின் ஒவ்வொரு சின்னசின்ன விஷயங்களும் ரசிகர்களால் கவரப்படுவதோடு, வைரலாகவும் மாறிவிடும். அந்த வகையில் அஜித் சைக்கிள் டயரை ஓட்டிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தல அஜித் பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் சிம்பிளாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாளக்கூடியவர். அதனாலேயே அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகம். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது படப்பிடிப்பு முடிந்து அஜித், தனது குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வரும் நிலையில், அஜித் அவரது மகள் அனோஷ்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் அனோஷ்காவின் பிறந்த நாளான இன்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் அஜித் இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

சில வருடங்களுக்கு முன், தனது மகள் அனோஷ்காவின் பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில், அஜித் கலந்துகொண்டு அதில் தனது மகளுக்காக, சைக்கிளின் ரப்பர் டயரை ஓட்டியுள்ளார்.

அத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் தன் மகளுக்காக பாசமிகு தந்தையாக அவர் 90's கிட்ஸ்ஸாக மாறி அவர் செய்த செயல் பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.

இன்று அனோஷ்காவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர் ஒருவர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com