
ஏ.கே என்னும் நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் ஏ.கே என்னும் அஜித் குமார். தமிழ்நாட்டின் அதிக ரசிகர்களை கவர்ந்த முக்கிய நடிகர்களில் முதன்மையானவராக நடிகர் அஜித் இருந்தாலும் நடிப்பை தவிர்த்து வேறு எந்த பொது செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடுவது கிடையாது.
அதேசமயம் உலகின் பல்வேறு பகுதிகளில் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித். வலிமைக்குப் பிறகு விடாமுயற்சி என்ற திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தில் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது மற்றொரு கதாநாயகியாக ஹூமா குரேஷியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்று சொல்லப்படுகிறது.
ஹூமா குரேஷி ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இணைய உள்ளாராம். மேலும் படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும், படப்பிடிப்பு துபாய் மற்றும் அபுதாபியில் நடக்க இருப்பதாகவும் அதற்கு முன்கூட்டியே லொகேஷன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹூமா குரேஷி வலிமை திரைப்படத்தில் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தியதால் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிப்பதற்கு விடாமுயற்சி படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக திரை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.