ஒரே நாளில் வாழ்க்கை மாறிய சோகம்.. பிரபல நடிகர் பாபு காலமானார்!

நடிகர் பாபு
நடிகர் பாபு

என் உயிர் தோழன் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானா நடிகர் பாபு நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த பாபு, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுயிர் தோழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்குப் பிறகு பெரும் புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

மனசார வாழ்த்துங்களேன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக் காட்சியை அப்படியே தத்ரூபமாக நடிப்பதாக சொல்லி டூப் போடாமல் மாடியில் இருந்து குதித்திருக்கிறார். ஆனால் நிலை தடுமாறி தவறுதலாக வேறு இடத்தில் குதித்த போது அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியிருக்கிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோதும் அது பலனளிக்காமல் போனது.

இதனால் படுத்த படுக்கையான அவர், 30 வருடங்களாக கடும் அவதியுற்றார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல் மேலும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என்பது இவரின் வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com